தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆவன் கீரின் மேஜிக் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆவின் கிரீன் மேஜிக் (4.5% கொழுப்பு) உள்ளிட்ட முக்கிய பால்களின் விநியோகம் 50 முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றனர்.
கோமாரி நோய் பாதிப்பு மற்றும் கடுமையான கோடை வெப்பம் காரணமாக பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவினுக்கு கிடைக்கும் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக கிரீன் மேஜிக் உள்ளிட்ட சில வகை பால்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆவின் பால் கிடைக்காததால் பல பகுதிகளில் பொதுமக்கள் தனியார் நிறுவனங்களின் பால்களை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும், ஆவின் பாலின் கொழுப்புச் சத்து மற்றும் தரம் குறித்து பல்வேறு தரப்பினரிடையே விவாதங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், பால் வரத்து குறைந்ததாலும் கிரீன் மேஜிக் பால் உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதாலும் உற்பத்தி தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் நிலை சீரடைந்தவுடன் உற்பத்தி மற்றும் விநியோகம் மீண்டும் அதிகரிக்கப்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
”நயினார் நாகேந்திரனுக்கு ‘ரெட் சிக்னல்’…தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?
