spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை ரூபாய் 12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!

இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா தி.மு.க. அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழைநீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, மிக்ஜாம் புயல் மழையால், சென்னை மாநகரம், புறநகர் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக வழங்குவதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக, மேற்கண்ட நிவாரணங்களைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிட இந்த விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ