ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் மகளிர் கல்வி மறுப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி
மகளிரை பின் தள்ளக்கூடிய நாடு வளர்ந்தது இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கு இணையாக மகளிருக்கு கல்வி
தமிழக பெண் ஆளுமைகள் உடனான கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு இருந்தாலும் இந்தியாவில் பொருளாதாரம் வளர்கிறது. கல்வியில் ஆண்களை விட இன்று பெண்கள் சிறப்பாக பயில்கின்றனர். பட்டங்களை அதிகமாக பெறுகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் மகளிர் கல்வி மறுக்கப்பட்டு, வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் தமிழ்நாட்டில் ஆண்களுக்கு இணையாக மகளிருக்கு கல்வி பயின்றனர்.

20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 நாடு
இராணுவ துறைகளில் உள்ள அனைத்து துறைகளிலும் இன்று மகளிருக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது ஆரம்பம் மட்டுமே இது தொடர வேண்டும். சமுதாயத்தில் மகளிருக்கு வாய்ப்பளிக்காத, மகளிரை பின் தள்ளக்கூடிய எந்த ஒரு நாடும் வளர்ந்தது இல்லை. உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சி அடைய இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது. இதே சூழலில் இந்தியா பயணித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறும். பாம்புபிடி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கீகரித்து, மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை வழங்கவேண்டும்” எனக் கூறினார்.