Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் விரைவில் மின்சார பேருந்துகள்- ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் விரைவில் மின்சார பேருந்துகள்- ஆளுநர் ஆர்.என்.ரவி

-

- Advertisement -

ஆளுநர் உரையுடன் இந்தாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் உரையை தொடங்கினார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அமலியில் ஈடுபட்டன. ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தன.

we-r-hiring

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நதிநீர் பங்கீடு விவகாரங்களை தமிழக அரசு திறம்பட கையாண்டு வருகிறது. மேகதாது அணையை கட்ட கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. முதலமைச்சர் தலைமையின்கீழ் காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. விபத்தில் சிக்கியவர்களை காக்க நாட்டிலேயே முதல் முறையாக ‘நம்மை காக்கும் 48’ திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா அலைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது. கொரோனா காலத்தில் கற்றல் குறைபாடுகளை தவிர்க்கும் வகையில் இல்லம்தேடி கல்வி திட்டம் அமைந்துள்ளது. நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்த பேராசியர் க. அன்பழகன் பெயரில் மேம்பாட்டுத் திட்டம். சென்னை புத்தக கண்காட்சியை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் இலக்கியங்கள் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. கிராமப்புற மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் நீட் தேர்வு உள்ளது. சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

governor

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்குவரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. பல்வேறு இடங்களில் மினி டைடல் பார்க் தொடங்கப்பட்டுவருகிறது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். 1.64 கோடி பேர் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

கடந்த சட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட சாலை விரிவாக்கம் பணிகள் 4 ஆண்டுகள் என திட்டமிட்டிருந்த நிலையில் முன் கூட்டியே முடியும் வகையில் பணிகள் நடந்துவருகிறது. மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தக்கூடிய பணிகள் நடைபெற்றுவருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.42,845 சுய உதவிக்குழுக்கள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.” என பேசினார்.

MUST READ