நாகர்கோவிலில் மளிகை கடையின் வாகன ஓட்டுநர், 28 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் வெளிநடப்புக்கு தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் காரணம் – ஜி.கே.வாசன்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டா ரயில் நிலையம் செல்லும் சாலையில் ஆறுமுகம் என்பவரின் மளிகை கடை இயங்கி வருகிறது. 28 லட்சம் ரூபாய் பணத்தை கடையின் ஊழியர் ராமதாஸ் என்பவரிடம் கொடுத்து வங்கிக்கு சென்று வங்கிக் கணக்கில் செலுத்துமாறு உரிமையாளர் அனுப்பி இருக்கிறார்.
கதிரவன் என்பவர் காரை ஓட்டிய நிலையில், ராமதாஸ் பணத்தை காரில் வைத்துவிட்டு வங்கிக்குள்ளே சென்றுள்ளார். பணம் செலுத்துவதற்கான விண்ணப்பத்தைப் பெற்று வெளியே வந்த ராமதாஸ், கார் மாயமானத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கடையின் உரிமையாளரிடம் அவர் கூறிய நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
“கோவையில் இனி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும்”- அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு!
கார் மற்றும் பணத்துடன் தப்பிச் சென்ற கதிரவனை காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.