Homeசெய்திகள்தமிழ்நாடு"கோவையில் இனி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும்"- அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு!

“கோவையில் இனி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும்”- அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு!

-

- Advertisement -

 

"கோவையில் இனி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும்"- அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு!

கோவையில் இனி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

தளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி…..’தலைவர் 171′ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளாக இன்று (பிப்.13) காலை 10.00 கூடியது. அதைத் தொடர்ந்து, மறைந்த தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதைத் தொடர்ந்து, பேரவை உறுப்பினர்கள் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைச் சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “கோவை மாநகர மக்களுக்கு 21 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

வாய் பேச முடியாதவராக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்…. ‘சைரன்’ பட கதை இதுவா?

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “கோவை மாநகர மக்களுக்கு இனி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க பில்லூர் திட்டம் தொடங்கப்படும். மழை இல்லாததால் சிறுவாணி தண்ணீர் தர இயலவில்லை என கேரளா காரணம் செல்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

"கோவையில் இனி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும்"- அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு!

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “பாசனத்திற்கு உரிய நீர் திறந்து விட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “விவசாயிகள் பயிரிட்டுக் கொண்டே இருந்தால் நீர் திறந்து விட்டுக்கொண்டே இருக்க முடியாது. மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது” என்றார்.

MUST READ