
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? – சீமான் அரசுக்கு கேள்வி
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் 14 சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும், 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள் அனுப்பப்படும் எனவும், 192 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்படும் எனவும் தெரிவித்தார்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்புப் போடப்படும் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனிடையே, சென்னையில் 360 டிகிரியில் இயங்கும் கேமரா மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய தேர்தல் பறக்கும் படை வாகனங்கள் கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது.
57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு – முதலமைச்சர்
வேலூர் மாவட்டத்தில் தமிழகம்- ஆந்திரா எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பைத் தொடங்கியுள்ளனர். மேலும் நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதேபோல், திருச்சி மாவட்டத்தில் 27 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் இருப்பார்கள் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை விநியோகம் தொடர்பாக, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.