Homeசெய்திகள்தமிழ்நாடுசேலத்தில் வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி!

சேலத்தில் வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி!

-

- Advertisement -

 

சேலத்தில் வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி!

we-r-hiring

தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் வாக்களித்தார்.

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்குமார்!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து காத்திருந்து, வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் குடும்பத்துடன் வந்திருந்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாக்கைச் செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார்.

‘மக்களவைத் தேர்தல் 2024’- தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “முதல்முறை வாக்காளர்களும், இளைஞர்களும், பெண்களும் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ