spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! – முதல்வர் ஸ்டாலின்

தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! – முதல்வர் ஸ்டாலின்

-

- Advertisement -

பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள் இன்று. தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! – முதல்வர் ஸ்டாலின்மேலும் தனது பதிவில் – இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர், எழுத்தாளர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் எனப் பல நிலைகளில் இருந்து பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள்!தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! – முதல்வர் ஸ்டாலின்தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்! “போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” எனத் திராவிடப் புரட்சிக்கவி பாரதிதாசனார் போற்றியதும் அவரைத்தான்! தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! என பதிவிட்டுள்ளாா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் – முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தமிழக அரசின் அறிவிப்பு

we-r-hiring

MUST READ