spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"இறுதி கட்டத்தில் சாத்தான்குளம் வழக்கு"- சிபிஐ

“இறுதி கட்டத்தில் சாத்தான்குளம் வழக்கு”- சிபிஐ

-

- Advertisement -

“இறுதி கட்டத்தில் சாத்தான்குளம் வழக்கு”- சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சாத்தான்குளம் கொலை வழக்கு: இதுவரை நடந்தது என்ன? - BBC News தமிழ்

அதில், “சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து பின் சிபிஐ காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில், நட்சத்திர சாட்சிகளான ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சிகளை மட்டுமே இது வரை விசாரித்துள்ளனர். 47 சாட்சிகளிடம் விசாரணை நடத்த ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளேன். ஏற்கனவே பல முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன்.” என மனுவில் கூறியிருந்தார்.

we-r-hiring

Tamil News | உன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை | Dinamalar

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரணை செய்ய வேண்டியுள்ளது. குற்றவாளிகள் ஒன்பது நபரும் போலீசார் என்பதால் ஜாமின் கொடுத்தால் சாட்சிகள் நிச்சியமாக மிரட்டப்பட்டு கலைக்கப்படுவார்கள், உண்மை வெளி வராது. இந்த வழக்கில் பல சாட்சிகள் காவல்துறை சார்ந்து இருப்பதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் அந்த சாட்சிகள் கலைக்கப்படுவார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையை தாமதமாக்கி வருகின்றனர். ஒரு சாட்சியை விசாரணை செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிறது.

ஆகவே, மே மாத நீதிமன்ற விடுமுறை காலத்திலும் இந்த வழக்கினை கீழமை நீதிமன்றம் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, வழக்கினை தீர்ப்பிற்காக ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

MUST READ