spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசவுக்கு சங்கருக்கு மே 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சவுக்கு சங்கருக்கு மே 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

-

- Advertisement -
செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?
savukku sankar

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொய்யான தகவல் பரப்பிய வழக்கில் சவுக்கு சங்கர் மே 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் கடந்த மே 04ம் தேதி காலை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சவுக்கு சங்கரை கோவை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே அவர்கள் வந்த இன்னோவா காரில், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலில், தேனி வட்டாட்சியர் ராணி முன்னிலையில் சோதனை செய்ததில், 409 கிராம் கஞ்சா மற்றும் 15,500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதுவரை, அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

'சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு'- 2 பேர் கைது

இதனிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ – வின் போலியான ஆவணங்களை தயாரித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோசடி, போலி ஆவணங்களை புணைதல், போலி ஆவணங்கள் மூலம் பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உட்பட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கரை மே 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொய்யான தகவல் பரப்பிய வழக்கில் சவுக்கு சங்கர் மே 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

MUST READ