spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏ.வி.எம் சரவணனின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி…

ஏ.வி.எம் சரவணனின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி…

-

- Advertisement -

ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக மறைந்தாா். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவா்களும், திரைநட்சத்திரங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனா் மற்றும் செய்தியாளா்களுக்கு பலரும் பேட்டியளித்து வருகின்றனா்.ஏ.வி.எம் சரவணனின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி…நடிகர் பார்த்திபன்

“ஏ.வி.எம் மூன்று எழுத்து மாதிரி பணிவு, பண்பு, ஒழுக்கம் என ஒட்டு மொத்தத்திற்கும் உதாரணம் சரவணன். அவரைப் பார்த்தால் பணிவும் பயமும் ஏற்படும் மாமனிதர் சரவணன். கடைசி வரை அவரின் மரியாதை குறையவே குறையாது. அவர் மட்டும் காரணம் அல்ல அவரது தந்தை மெய்யப்ப செட்டியாரும் ஒரு காரணம்.ஏ.வி.எம் சரவணனின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி…

we-r-hiring

முரட்டுக்காளை படத்திற்கு பின்பு நான் சரவணன் சரக்கு கடிதம் எழுதினேன். உங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தி அடையும் என நான்  குறிப்பிட்டேன். சரவணன் சாரின் இழப்பு இயற்கையின் கட்டாயம். சரவணன் சார் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்றால் மீண்டும் படத்தை தொடர வேண்டும். என்னைப் போன்று மிக சாதாரண கலைஞர்களைக் கூட வெற்றி தோல்வி கடந்து திரைப்படங்கள் எடுக்கும் போது ஏ.வி.எம் நிறுவனத்தால் பல படங்கள் எடுக்க முடியும்“ என்று நடிகா் பாா்த்திபன் பேட்டியளித்துள்ளாா்.

ஒய் ஜி மகேந்திரன்ஏ.வி.எம் சரவணனின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி…“சரவணன் எனக்கு மிகவும் நெருக்கமானவர். சரவணன் சார் வாழ்க்கையில் பேசியது 40 பக்க புத்தகத்தில் அடங்கிவிடும். அவ்வளவுதான் பேசுவார். பேசுவது குறைவாக இருந்தாலும் செயலில் செம்மையாக இருப்பார். ஒரு வருடத்திற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். கடந்த காலங்களில் நாம் பணியாற்றியதை தற்போது நினைவு கூர்ந்து அதற்காக நம்மை பாராட்டுவார். இவரின் ஆத்மா நேரடியாக இறைவனிடம் சென்று சேரும். ஜென்டில்மேன் என்பதற்கு சிறந்த உதாரணம் சரவணன். சரவணன் என்னை மாதிரி பல நடிகர்களை உருவாக்கியுள்ளார்“ என ஒய் ஜி மகேந்திரன் கூறியுள்ளாா்.

நடிகர் விஷால்ஏ.வி.எம் சரவணனின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி…”இந்திய சினிமாவில் மிகப்பெரிய இழப்பு. இந்திய சினிமாவின் தூண் ஏ.வி.எம். சரவணன் சார் எத்தனையோ நடிகர்களுக்கு இயக்குனர்களுக்கு அடையாளம் கொடுத்துள்ளார். எனது அப்பா தயாரிப்பாளராக இருந்தபோது சிறுவயதில் ஏ.வி.எம் சரவணன் சாரை பார்த்து வியந்துள்ளேன். உதவி இயக்குனராக இருக்கும்போது, எடிட்டிங் கற்றுக் கொண்ட போதும் சரவணன் சாரை பார்த்து வியந்துள்ளேன். 86 வயதில் சரவணன் சார் இல்லை என்பது தமிழ் சினிமாவிற்கு இழப்பு.

திரைப்பட வாய்ப்பு தேடி வருபவர்கள் ஏவிஎம் ஸ்டுடியோக்குள் ஒருமுறை செல்ல வேண்டும். ஐயாவை சந்தித்து வாய்ப்பு பெற வேண்டும் என்பது கனவாக இருக்கும். பராசக்தி படம் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படுத்தியது.  ஒரு தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருந்தவர் சரவணன் ஐயா. ஏவிஎம் ஸ்டுடியோ நிறைய பேருக்கு வாய்ப்பையும் வாழ்க்கையையும் கொடுத்துள்ளது. நடிகர்களின் பெயர் கூட தெரியாது என்று சொல்பவர்கள், ஏ.வி.எம் சரவணன் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். மீண்டும் ஏவிஎம் நிறுவனங்கள் திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும். ஏ.வி.எம் சரவணன் ஐயா விட்டு சென்ற பணிகள் தொடர வேண்டும்” என நடிகா் விஷால் கூறியுள்ளாா்.

பாமகவுக்கு உரிமை கோரும் விவகாரம்! சிவில் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ், அன்புமணிக்கு உத்தரவு!

MUST READ