Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா? - சீமான் பாஜகவிற்கு கேள்வி

ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா? – சீமான் பாஜகவிற்கு கேள்வி

-

"விடுதலைப் புலிகள் எங்கிருக்கிறது?"- சீமான் சரமாரி கேள்வி!

ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்

ஒடிசாவில் செல்வாக்கு மிக்க தமிழராக இருக்கும் விகே பாண்டியனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருவது பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார் இது தொடர்பாக. செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது:

இந்த பேச்சை எல்லாம் ஏப்ரல் 19-க்கு முன்பாக இவர்கள் பேசியிருக்க வேண்டும். இப்போது தெரிகிறதா எங்கள் தமிழ் தேசிய அரசியல் எவ்வளவு சரியானது என்று? பீகாரியா? பகாரியா? என நிதிஷ் குமார் பேசும்போது ஒன்றும் சொல்லவில்லை. ஒடிசாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரையில் தமிழர் ஒருவர் முதல்வராக வருவது குறித்து ஆவேசமாக பேசி இருக்கிறார். அதை யாரும் எதுவும் கேட்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாபி தான் ஆள வேண்டும், அரவிந்த் கெஜ்ரிவாலை ஏன் உள்ளே விடுகிறீர்கள் என பிரதமர் மோடி பேசும்போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று நான் சொன்னால் மட்டும் விமர்சிக்கின்றனர். பிரிவினைவாதம், இன வெறி என்று பேசி எங்களை கேவலப்படுத்தினீர்கள்? அப்படி என்றால் எங்க ஆள் விகே பாண்டியன் இந்தியன் இல்லையா? நாங்கள் இந்தியர் இல்லையா?

seeman

ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா? எங்கள் நாட்டை 60 ஆண்டுகளாக எவர் எவரோ ஆளும்போது நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? விகே பாண்டியன் ஒடிசாவில் இன்னும் முதல்வராக ஆளவில்லை, ஆளப் போவதாக ஒரு நிலைமை இருப்பதற்கே இந்த துடி துடிக்கிறீர்களே.. என் மண் என் மக்கள், என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடந்தாரே, இப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு அவர் என்ன சொல்லப் போகிறார்? ஒரு தமிழராக அவரது நிலைப்பாடு என்ன?. என இவ்வாறு கூறியுள்ளார்.

MUST READ