spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி- சீமான்

தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி- சீமான்

-

- Advertisement -

தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி- சீமான்

தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image

தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள சீமான், “தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுகிறது. என் மீதான புகார் குறித்து விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.குற்றச்சாட்டுகளை கண்டு நான் அஞ்சவில்லை.எங்கும் ஓடி ஒளியவில்லை.

we-r-hiring

ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்கிறார் என்று நான் ஒரு குற்றச்சாட்டை சொன்னால் என்னை சும்மா விடுவீர்களா? ஏன் தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த குற்றச்சாட்டு வருகிறது. என் மீதான குற்றச்சாட்டு உண்மை என நம்பியிருந்தால் லட்சக்கணக்கான இளைஞர்கள் என்னை பின் தொடர்வார்களா? உண்மையாகவே நான் குற்றம் செய்திருந்தால் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுங்கள். பார்ப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது. இங்கு ஒரே சமூகத்திலேயே பல கலாச்சார மாறுபாடுகள் இருக்கும்போது, எப்படி ஒரே நாடு ஒரே சட்டம் இருக்கும்? ஒரே நாடு என பேசும் பாஜக, காவிரியில் நீரை திறக்க போராட வேண்டியதுதானே?” என்றார்.

MUST READ