திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க காவல்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு போதைக் காளான் விற்பனையில் ஈடுபடும் நபரை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று கொடைக்கானல் நகரில் காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் போதை காளான் கேட்டு வந்த சுற்றுலா பயணிகள் 16 பேர் சிக்கினர். இதனை அடுத்து அவர்களை கைதுசெய்து காவல் நிலையம் அழத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி, கொடைக்கானல் நகரில் போதை காளான் விற்பனை தொடர்பாக கடந்த சில மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் போதை காளான் குறித்து பதிவு செய்பவர்களின் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.