spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு - செல்வப்பெருந்தகை இரங்கல்!

திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – செல்வப்பெருந்தகை இரங்கல்!

-

- Advertisement -

திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விழுப்புரத்தில் நேற்று (ஏப்ரல் 05) நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி, திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. புகழேந்திக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 06) காலை 10.30 மணிக்கு காலமானார்.

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விழுப்புரம் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான திரு.என்.புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர் எங்களுடன் சட்டப்பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டதையும், அவருடன் பழகிய காலங்களையும் எண்ணி பார்க்கிறேன். அவரது பேச்சுகளும், மக்கள் சேவைகளும் இன்றும் எனது நினைவில் நீங்கா இடம் பெற்று நிற்கின்றன.

திரு. என். புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு @CMOTamilnaduதிரு @mkstalin அவர்கள் மற்றும் @arivalayam நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் வேதனையோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

MUST READ