spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎங்களுடைய நாடி நரம்பு எல்லாவற்றிலும் கலந்திருப்பது காமராஜருடைய ஆட்சி தான் - செல்வப்பெருந்தகை

எங்களுடைய நாடி நரம்பு எல்லாவற்றிலும் கலந்திருப்பது காமராஜருடைய ஆட்சி தான் – செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

எங்களுடைய நாடி நரம்பு எல்லாவற்றிலும் கலந்திருப்பது காமராஜருடைய ஆட்சி தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக தூத்துக்குடி வாகைக்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிகப்பெரிய பொற்கால ஆட்சியை தந்தவர். காமராஜர் அவருடைய ஆட்சியில் தான் தமிழ்நாடு ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தப்பட்டது. மிகப்பெரிய அசைக்க முடியாத கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்த தலைவர். கல்வி கண்ணை திறந்தவர், பல சாதனைகளை புரிந்தவர். எல்லோரும் காமராஜரை கொண்டாடுகிறார்கள், ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மட்டும்தான் உரிமை கொண்டாட முடியும். எங்களுடைய நாடி நரம்பு எல்லாவற்றிலும் கலந்திருப்பது காமராஜருடைய ஆட்சி தான்

காவிரி மேலாண்மை வாரியமும் மேலாண்மை ஒருங்கிணைப்பு குழுவும் என்ன ஆணையிட்டு இருக்கிறதோ அதை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படி நடைமுறைப்படுத்த தவறினால் ஒன்றிய அரசு அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற ஆணை இருக்கிறது காவிரி மேலாண்மை ஆணையம் இருக்கிறது. எல்லா ஆணையும் இருந்தும் தமிழகத்தின் உரிமையை கர்நாடக அரசு மறுக்கிறது என்றால் அதை ஒன்றிய அரசு அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழக காவல்துறை மீது நமக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஸ்காட்லாந்துக்கு நிகராக தமிழக காவல்துறை இருந்து வருகிறது. புலன் விசாரணை நடந்து வருவதால் அதை நாம் பேசுவது சரியாக இருக்காது. ஒரு வாரம் தான் ஆகி இருக்கிறது, அதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய மாவட்ட தலைவர் ஜெயக்குமார் விஷயத்திலும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். காவல்துறை சேகரித்து புலன் விசாரணை செய்து கொண்டிருக்கிறது.

அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருவதால் கைதுக்கு தாமதமாகலாம். தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது .முடிவு வரட்டும் அதன் பிறகு புலன் விசாரணையில் நம்பிக்கை இல்லை என மறுபக்கம் செல்லலாம், எந்த ஒரு காங்கிரஸ்காரனும் மது வேண்டும் என கூற மாட்டார்கள் இது சம்பந்தமாக தமிழக அரசை வலியுறுத்துவேன்” என இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

 

 

MUST READ