spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிள்ளு முள்ளு வேலைகளில் மோடி கை தேர்ந்தவர் - செல்வப்பெருந்தகை விமர்சனம்!

திள்ளு முள்ளு வேலைகளில் மோடி கை தேர்ந்தவர் – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

-

- Advertisement -

திள்ளு முள்ளு வேலைகளில் மோடி கை தேர்ந்தவர் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

we-r-hiring

சென்னை முகப்பேரில் தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் 92வது வார்டு சார்பில் கவுன்சிலர் கே.வி திலகர் தலைமையில், காந்தி சிலை திறப்பு மற்றும் கட்சி கொடி ஏற்றி கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கட்சிக்கொடியனை ஏற்றி காந்தி சிலை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த கு.செல்வப்பெருந்தகைக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் 150க்கும் மேற்பட்ட பைக்குகள் பேரணி, வான வேடிக்கைகள் என பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து மேடையில் பேசிய அவர், சென்னையில் காங்கிரஸ் வலிமையாக இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறுகையில், மோடி எந்த வகையான தில்லு முல்லு வேலையும் செய்யக்கூடியவர். அதில் கை சேர்ந்தவர். இந்தியாவில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எல்லாம் அவர் நினைப்பதுதான். ஒரு நாடு,ஒரு மொழி, ஒரு தேர்தல், ஒரு அதிபர், ஒரு இனம் என்று சொன்ன மோடி, இரண்டு தேர்தல் ஆணையரையும் நீங்களே ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டு. ஒரே ஒரு தேர்தல் ஆணையரை வைத்து தேர்தல் நடத்த முயற்சி செய்து வருகிறார். ஆகவே இந்த சர்வாதிகார அரசியல் அமைப்பை மக்கள் தூக்கி எறிவதற்கு தயாராகி விட்டார்கள். நாட்கள் எண்ணப்படுகின்றன இந்த ஆட்சி தூக்கி எறியப்படும். இந்தியா கூட்டணியில் மாபெரும் எழுச்சியான 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த 10 ஆண்டு ஆட்சிகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை இந்த பத்து ஆண்டில் பாஜக செய்துள்ளதாக குஷ்பு பேட்டிக்கு பதில் அளித்துள்ளார். அது குறித்து பதிலளித்த கு.செல்வப்பெருந்தகை கூறுகையில், பாரதப் பிரதமரை அவர் கற்றுக் கொண்ட தமிழில். என்ன செய்தார் என கூற வேண்டும் அண்ணாமலையும் கூற வேண்டும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினாரே கொடுத்தாரா. 480 க்கு கேஸ் விலையை குறைப்பதாக உறுதிமொழி எடுத்தாரே கொடுத்தாரா.., 50 ரூபாய்க்கு பெட்ரோல் 40 ரூபாய்க்கு டீசல் என்று கூறினாரே குறைத்தாரா. ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் கொடுப்பதாகவும், கருப்பு பணத்தை கொண்டு வருவதாக கூறினாரே கொடுத்தாரா. அவர் எதுவுமே செய்யவில்லை, மக்களை ஏமாற்றியுள்ளார். மக்களுடைய வரிப்பணத்தில் அதானி போன்ற மிகப் பெரிய நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். அதானி அவரது கம்பெனிக்கு சி.இ.ஒ தான்.. மோடி தான் அதானி கம்பெனிக்கு முதலாளி. போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது யார் கடத்துகிறார்.

முந்திரா துறைமுகம் கான்லா துறைமுகம் அங்கிருந்து கிருஷ்ணா பட்டினம் துறைமுகம் வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள மூன்று துறைமுகத்தில் எத்தனை ஆயிரம் டன்கள் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தார்களா. IB ,RAW, மற்றும் மத்திய உளவுத்துறை போன்ற வலிமையான துறைகள் வலிமையான பிரதமர் இருந்தும் போது போதை பொருள் எப்படி நடமாடுகிறது. ஏன் இரும்பு கரம் கொண்டு அடக்கவில்லை எனவும். மத்திய உளவுத்துறை முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது எனவும். இந்திய காவல்துறை அமைப்புகள் முழுவதுமாக தோல்வியடைந்து விட்டதாகவும் கூறினார். இதற்கு பொறுப்பேற்காமல் யார் மீது பழி போடலாம் என பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். பிரதமரின் கவனத்திற்கு வராமல், அவரது இசைவு இல்லாமல் இந்தியாவில் போதைப் பொருள்கள் நடமாற்றம் எப்படி வருகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

MUST READ