Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என விஜய் கூறிய கருத்தை வரவேற்கிறோம் - செல்வப்பெருந்தகை!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என விஜய் கூறிய கருத்தை வரவேற்கிறோம் – செல்வப்பெருந்தகை!

-

- Advertisement -

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என விஜய் கூறிய கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை சிதைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மக்கள் தலைவர் ராகுல் காந்தியின் கூற்றை பிரதிபலித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு @actorvijay அவர்களின் கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது.

தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு அணியிலும் பாசிச பாஜக மட்டும் தனியாக உள்ளதையும் மக்கள் நன்கு அறிந்து விரைவில் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனk குறிப்பிட்டுள்ளார்.

MUST READ