Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

-

 

காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
File Photo

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் தேதி அறிவிப்பு!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி அன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 8-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (அக்.16) மாலை 04.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த அறிக்கையை ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்தது.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்!

அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா? செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியைக் கலைப்பார் என அமலாக்கத்துறை கூறுகிறது” எனத் தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “வழக்கு ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் உள்ள போது, சாட்சிகளை எப்படி கலைக்க முடியும்? நீதிமன்றமே மருத்துவரை நியமித்து உடல்நிலை குறித்து ஆய்வு செய்யலாம்” என்று வாதிட்டார்.

பின்னர் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், “ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கைபடி, செந்தில் பாலாஜி வெளி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற தேவையில்லை. அரசு மருத்துவமனையில் சிகிச்சைத் தர முடியாது என்ற நிலை இருந்தால் மருத்துவ காரணத்திற்கு ஜாமீன் தரலாம்” என்று வாதிட்டார்.

வடமாநிலங்களில் களைக்கட்டிய நவராத்திரி திருவிழா!

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

MUST READ