Homeசெய்திகள்தமிழ்நாடு"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?"- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?”- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

-

- Advertisement -

 

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
File Photo

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை (அக்.30) விசாரணைக்கு வரவுள்ளது.

we-r-hiring

விக்ரம் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த ஜூன் 14- ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல், 8- வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் இரண்டு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் காரணங்களைக் குறிப்பிட்டு, ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வு, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கடந்த அக்டோபர் 19- ஆம் தேதி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

நவம்பரில் லியோ வெற்றி விழா கொண்டாட்டம்

அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையீடப்பட்டது. எனினும், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை வரும் அக்டோபர் 30- ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அனிருதா போஸ் மற்றும் பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை (அக்.30) விசாரணைக்கு வரவுள்ளது.

MUST READ