Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி தொடர்பான மூன்று மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு!

செந்தில் பாலாஜி தொடர்பான மூன்று மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு!

-

 

Senthil balaji

மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!

அத்துடன் அமைச்சருக்கு மேற்கொண்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் இருதயத்தில் மூன்று ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சையைச் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர். அதேபோல், இஎஸ்ஐ மருத்துவர்களும் பைபாஸ் அறுவைச் சிகிச்சையைச் செய்ய பரிந்துரைத்திருந்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இன்று (ஜூன் 14) மாலை 04.00 மணிக்கு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் ஜூன் 28- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, தி.மு.க. சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியும், அமைச்சரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

“செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரிமாண்ட் உத்தரவு சரியானது, ஜாமீன் வழங்கக்கூடாது. எங்களிடமும் மருத்துவக்குழு உள்ளது. இடைக்கால ஜாமீன் கூட வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. செந்தில் பாலாஜி நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தார். தற்போது உடல்நலக்குறைவு என்கிறார். உடல்நலம் பாதித்திருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்கத் தயாராக உள்ளோம் என்று வாதிட்டார்.

தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இஎஸ்ஐ மருத்துவர்கள் கூறியதை ஏன் நீதிமன்றத்தில் சொல்லவில்லை என கேள்வி எழுப்பினோம். நள்ளிரவே கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மூன்று மனுக்கள் மீதும் நாளை (ஜூன் 15) உத்தரவுப் பிறப்பிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

MUST READ