Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்?

செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்?

-

 

Senthil balaji

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, சென்னை புழல் சிறையில் அடைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் நடிப்பில் உருவாகும் கங்குவா….. ரசிகர்களுக்காக காத்திருக்கும் செம ட்ரீட்!

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து காரி அழைத்துச் சென்ற போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் இருதய அறுவைச் சிகிச்சையைச் செய்தனர். அதைத் தொடர்ந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்திருந்தார். அனைத்து மனுக்களுக்கும் தீர்ப்பு வெளியான நிலையில், அது அமலாக்கத்துறைக்கு சாதகமாகவே இருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில், அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூலை 17) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றக் காவலில் இருப்பதால், சென்னை புழல் இரண்டாவது சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த படத்திற்கு தயாராகும் லோகேஷ் கனகராஜ் அண்ட் டீம்……லேட்டஸ்ட் அப்டேட்!

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து ஆயுதப்படை காவல்துறையினர் பலத்தப் பாதுகாப்புடன் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறைக்கு அழைத்துச் செல்லவிருப்பதாக தகவல் கூறுகின்றன.

MUST READ