Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில்பாலாஜி வழக்கு- டிஜிபி, உள்துறை செயலருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

செந்தில்பாலாஜி வழக்கு- டிஜிபி, உள்துறை செயலருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

-

செந்தில்பாலாஜி வழக்கு- டிஜிபி, உள்துறை செயலருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

செந்தில்பாலாஜி தொடர்பாக வழக்கில் தமிழ்நாடு டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பண மோசடி வழக்கு விசாரணையை முடிக்க தமிழ்நாடு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், மேலும் 6 மாதம் கூடுதல் கால அவகாசம் கேட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசாதுதீன் அமனுல்லா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை கேட்கட்டும் என கருத்து தெரிவித்தனர்.

நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பீர்கள், 24 வருடமானாலும் வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பீர்கள், அரசுகள் எப்படி செயல்படும் என்பது தெரியும் என நீதிபதிகள் காட்டமாக பதிலளித்தனர். மேலும் செந்தில் பாலாஜி வழக்கில் எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை அரை மணி நேரத்தில் கூற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர். அறை மணிநேரத்தில் முடிவெடுத்து கூறாவிட்டால், தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

 

MUST READ