- Advertisement -
ஸ்டாலினின் தியாகமே அவரை முதல்வராக உயர்த்தியுள்ளது – சிவகார்த்திகேயன்
திருச்சி மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளையொட்டி ’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் கடந்த 23 துவங்கி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அந்த கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் கண்டு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேசிய சிவகார்த்திகேயன், “மிகப்பெரிய உயரங்களை அடைவதற்கு பல வலிகளையும், தியாகங்களையும் தாண்டி வர வேண்டும் என்பதை இந்த புகைப்பட கண்காட்சி உணர்த்துகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய ஆளுமையின் மகனாக இருந்தாலும் நிறைய விஷயங்களை தாண்டி, சாதனைகளைப் புரிந்து முதல்வராக வந்துள்ளார். அது இக்கண்காட்சி மூலம் தெரிகிறது. புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஸ்டாலினின் கும்பிட்டவாறே உள்ள குட்டிக் குழந்தை புகைப்படம் தன்னை வெகுவாக கவர்ந்தது. ஸ்டாலினின் வலியும் தியாகமும் சாதனைளும் அவரை முதல்வராக உயர்த்தியுள்ளது” எனக் கூறினார்.