spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவறுமை காரணமாக தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!

வறுமை காரணமாக தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!

-

- Advertisement -

வறுமை காரணமாக தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!

திருவண்ணாமலையில் வறுமை காரணமாக தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..

திருவண்ணாமலை அடுத்த கீழ் அணைக்கரை ஹவுசிங் போர்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஜோதி (வயது 50), அவரது மகன் விஜய்(எ)மனோஜ் (வயது 34), வசித்து வந்துள்ளனர். இதில் எந்த வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் விஜய் ஊர் சுற்றி பொழுதை கழித்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது தாய்க்கு, மகனுக்கும் வீட்டில் பல்வேறு தகராறு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

நேற்றும் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஜோதி தனது மகனை திட்டியுள்ளார். தாய் திட்டியதால் மனமுடைந்த விஜய், நான்காவது மாடியில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வேலைக்குச் சென்றுவிட்டு தந்த தாய், தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்ததும் மூன்றாவது மாடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் உள்ள படுக்கையறையில் தாய் ஜோதியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் திருவண்ணாமலை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

MUST READ