Homeசெய்திகள்தமிழ்நாடுதென் மாவட்ட மக்களே உஷார்- தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தென் மாவட்ட மக்களே உஷார்- தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

-

- Advertisement -

 

கனமழை காரணமாக, நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
File Photo

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேபோல், மாஞ்சோலை, கோதையார் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

we-r-hiring

மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!

கனமழை காரணமாக, மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம், கொல்லம், திருவனந்தபுரம், மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கனஅடியாக உள்ள நிலையில், தாமிரப்பரணியில் வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

இதனிடையே, தாமிரபரணி ஆற்றில் 5,000 கனஅடி அளவிற்கு தண்ணீர் செல்லும் என்பதால், தாமிரபரணி கரையோரங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

MUST READ