Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கி மீன் மற்றும்
மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டு துறையில் இருந்து நேற்று மதியம் ராமன் மற்றும் பொன்னுதுரை ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் பொன்னுதுரை, ஜெயச்சந்திரன், ராமன், ரமேஷ், சிவகுமார் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு பைபர் படகில் 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கி, இவர்கள் வைத்திருந்த 2 ஜிபிஎஸ் கருவி, ஒரு செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச், 50 கிலோ நண்டு, மீன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு 5 மீனவர்களையும் விரட்டி அடித்துள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக ஆறுக்காட்டுதுறை கடற்கரைக்கு இன்று காலை கரை வந்து சேர்ந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ