spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

-

- Advertisement -

 

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!
File Photo

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா என்பவரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது காவல்துறையினர்.

we-r-hiring

விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வா. வழக்கு விசாரணைக்காக விஷ்வாவை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், சோகண்டி பகுதியில் அவர் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர், அவரை பிடிக்க முயன்றனர்.

அப்போது, காவல்துறையினரைத் தாக்கிவிட்டு, தப்ப முயன்ற விஷ்வாவை தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னையில் வெளுத்துவாங்கிய கனமழை

ரவுடி என்கவுன்ட்டர் குறித்து காவல்துறையினர் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “ரவுடி விஷ்வா கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி விஷ்வா” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ