spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமேடையில் விஜயகாந்த்- தொண்டர்கள் ஆரவாரம்!

மேடையில் விஜயகாந்த்- தொண்டர்கள் ஆரவாரம்!

-

- Advertisement -

 

மேடையில் விஜயகாந்த்- தொண்டர்கள் ஆரவாரம்!

we-r-hiring

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (டிச.14) காலை 11.00 மணிக்கு தே.மு.தி.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.

“சென்னையில் வரலாறு காணாத மழை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கூட்டத்தில், தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவச் சிகிச்சைக்கு பின்னர் முதல்முறையாக தே.மு.தி.க. நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றுள்ளார்.

முகக்கவசம் அணிந்தவாறு மேடைக்கு அழைத்து வரப்பட்ட விஜயகாந்தைக் கண்டதும் தே.மு.தி.க. தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

தென்காசி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்!

இந்த கூட்டத்தில், தே.மு.தி.க.வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய் பிரபாகரன் உள்ளிட்டோருக்கு தே.மு.தி.க.வில் முக்கிய பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி தொடர்பாக, இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை விஜயகாந்திற்கு வழங்கி தே.மு.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

MUST READ