Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் ஸ்டாலின் வாழ்த்து

புதிய பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் ஸ்டாலின் வாழ்த்து

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் புதிய தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.புதிய பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் ஸ்டாலின் வாழ்த்துதமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும். ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு. அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.

“அன்று கேப்டன் சொன்ன அதே வார்த்தை..” – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகருக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான வாழ்த்து!

we-r-hiring

MUST READ