Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்பேரவையில் திமுக கடும் எதிர்ப்பு: முதல்வர் விஜய்யின் பதிலுரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க எ.வ.வேலு கோரிக்கை!

சட்டப்பேரவையில் திமுக கடும் எதிர்ப்பு: முதல்வர் விஜய்யின் பதிலுரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க எ.வ.வேலு கோரிக்கை!

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு மாத காலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நிறைவு நாளான இன்று (08-09-2026) பேரவையில் காரசார விவாதங்கள் எழுந்தன. கூட்டத்தொடரின் இறுதி நாளில் போக்குவரத்து, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், திட்டம் மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் மேற்கொள்ளப்பட்டது.சட்டப்பேரவையில் திமுக கடும் எதிர்ப்பு: முதல்வர் விஜய்யின் பதிலுரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க எ.வ.வேலு கோரிக்கை!

இன்றைய அமர்வு தொடங்கியதும், பேரவையின் சட்ட ஒழுங்கு விவாதம் மற்றும் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதல்வர் விஜய் அளித்த பதிலுரை குறித்து எதிர்க்கட்சி கொறடாவும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.

we-r-hiring

அவையின் மாண்பை மீறும் செயல்: எ.வ.வேலு குற்றச்சாட்டு
அவையில் எ.வ.வேலு பேசியதாவது,  “இந்தச் சட்டமன்ற பேரவைக்கு என்று நீண்டகால மரபுகளும் மாண்புகளும் இருக்கின்றன. மானியக் கோரிக்கைகளின் மீது உறுப்பினர்கள் விவாதித்த பிறகு, சம்பந்தப்பட்ட அமைச்சர்களே அதற்குப் பதிலளிப்பதுதான் மரபு. இம்மாமன்றத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் முதலமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர். காவல்துறை தொடர்பான விவாதங்களின் போது அவர்கள் எப்போதும் கண்ணியமிக்க பதில்களையே அளித்து வந்துள்ளனர்.

நேற்றைய தினம் முதல்வர் பதிலளித்துப் பேசியபோது சுமார் 26 நிமிடங்கள் வரை நாங்கள் அமைதி காத்துப் பேரவைக்கு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால், பேரவை விதிப் புத்தகத்தில் ‘நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு பொருள் குறித்து பேரவையில் கருத்து தெரிவிக்க இடமில்லை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைமை இப்படியிருக்க, அமலாக்கத்துறை வழக்குத் தொடுத்து நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு விவகாரம் குறித்து முழுமையாக முதல்வர் பேரவையில் வாசித்துக் காட்டியுள்ளார். இது அவையின் மரபுக்கும் கண்ணியத்திற்கும் முற்றிலும் எதிரான செயலாகும். எனவே, இது பேரவை விதிகளுக்குட்பட்டதாக இல்லை என்பதே திமுகவின் உறுதியான கருத்தாகும்” என்று குறிப்பிட்டார்.

வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி காரசார உரை
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் வரலாற்றுப் பின்னணி மற்றும் சர்க்காரியா கமிஷன் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி விளக்கம் அளித்தார். “மிசா சட்டம் ஜனநாயகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட ஒன்று. அதில் 450-க்கும் மேற்பட்டோர் சிறையிலடைக்கப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதில் எங்களது தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா கொடுமைகளுக்கு ஆளாகி ஒரு ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார். பெரியார் கொள்க வழியில் திராவிட இயக்கத்தை நடத்தி வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

அதேபோல், சர்க்காரியா கமிஷன் குறித்து இந்தச் சட்டமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு, தலைவர் கலைஞர் அதற்குத் தகுந்த பதிலளித்துள்ளார். அந்தச் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் முரசொலி மாறன் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுவாக, அவையில் இல்லாத நபர்களின் பெயர்களைப் பேசுவது பேரவை விதிகளுக்கு எதிரானது. இறுதியில் சர்க்காரியா கமிஷன் விசாரணையின் முடிவில், முன்வைக்கப்பட்ட 26 குற்றச்சாட்டுகளும் எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படவில்லை என்றும், அதனால் வழக்குத் தொடர முடியாது என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது.”

அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தல்
தமது உரையின் நிறைவாக, “எனவே, நேற்றைய தினம் முதல்வர் பேசிய உரையில், காவல்துறை மானியக் கோரிக்கை சார்ந்த கருத்துகளைத் தவிர்த்து, ஆதாரமில்லாமலும், நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் பேசப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்” என்று எ.வ.வேலு பேரவைத்தலைவரிடம் வலியுறுத்திக் கோரினார்.  எதிர்க்கட்சி கொறடாவின் இந்த அதிரடிப் பேச்சால், கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழக சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

MUST READ