spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பிற மொழிகளை இழிவுப்படுத்துவதை நிறுத்த வேண்டும்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

“பிற மொழிகளை இழிவுப்படுத்துவதை நிறுத்த வேண்டும்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

udhayanidhi stalin tn assembly

we-r-hiring

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என சுருக்கி இழிவுப்படுத்துவதை அமித்ஷா நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது – பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது” என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து.

தமிழ்நாட்டில் தமிழ் – கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?

“ஆவின் நெய் விலை உயர்வை கைவிடுக”-அண்ணாமலை ட்வீட்!

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ