Homeசெய்திகள்தமிழ்நாடுதெரு பெயர் மாற்றம் விவகாரம் – ஆட்சேபனைக்குரிய தெரு பெயர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு…

தெரு பெயர் மாற்றம் விவகாரம் – ஆட்சேபனைக்குரிய தெரு பெயர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு…

-

- Advertisement -

தமிழகத்தில் உள்ளாட்சிகளில், எந்தெந்த தெருக்கள், ஊர் பெயர்கள்  ஆட்சேபனைக்கு உரிய வகையில் உள்ளது. எந்தெந்த தெருக்களின் பெயர்களை  நீக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தெரு பெயர் மாற்றம் விவகாரம் – ஆட்சேபனைக்குரிய தெரு பெயர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு…

we-r-hiring

தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்கள், கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளின் பெயர்களில் இடம்பெறும் சாதி சார்ந்த குறிப்புகளை நீக்குவதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மாநில முதலமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் பல சிக்கல்களை உருவாக்கும் என்பதால், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

அரசாணையின் படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக “ஆதி திராவிடர் காலனி”, “ஹரிஜன் குடியிருப்பு”, “வண்ணான்குளம்” போன்ற பெயர்களை மாற்றி, புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை முன்பே விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் ஆட்சேபனைக்குரிய வகையில் உள்ள தெரு மற்றும் ஊர் பெயர்கள் எவை, அவற்றில் எத்தனை பெயர்களை நீக்க வேண்டும் என்பதற்கான முழுமையான விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

MUST READ