இந்திய வானிலை ஆய்வுத் துறையின் வரலாற்று சிறப்புமிக்க 150-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு வானிலை ஆய்வு மையத்தின் உபகரணங்களின் பிரத்தியேக கண்காட்சி மற்றும் மாணவர்களின் பேரணி தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது.
மக்களுக்கு வானிலை தொடர்பானத் தகவலை அளித்து லட்சக்கணக்கான உயிர்களையும், அவர்களது உடைமைகளையும் தொடர்ந்து பாதுகாத்து வரும் இந்திய வானிலை ஆய்வுத்துறையின் 150- ஆம் ஆண்டு விழா சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.
150ம் ஆண்டு விழாவை ஒட்டி வானிலை மையத்தின் சிறப்பு அம்சங்களை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை இயக்குனர் பாலசந்தர் கொடி அசைத்து துவக்கி வைத்தார் இந்த பேரணியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வானிலை விவரங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொளத்தூர் ,பெரம்பூர் பிரதான சாலையில் ஊர்வலமாக 2 கிலோ மீட்டர் சென்றனர்.
நிகழ்ச்சித் தொடக்கத்தின்போது இந்திய வானிலை ஆய்வுத் துறை பிரத்தியேகமாக உருவாக்கிய பாடலுக்கு ஏற்றபடி மாணவிகள் நடனம் ஆடி அசத்தினர். மேலும் 2,000 மாணவர்கள் இணைந்து IMD 150 என்ற வடிவமைப்பை பிரமாண்டமாக உருவாக்கினார். இதில் அழகிய வானவில், மழைத்துளிகள் என கூடுதல் வடிவமைப்பும் இருந்தது. இது தவிர 25 உயர் வகுப்பு மாணவிகள் தங்கள் முகம் மற்றும் கைகளில் IMD 150, RMC 80 போன்றவற்றை வரைந்து அசத்தினர்.
இவ்விழா தொடர்பாக “இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 ஆண்டு காலப் பயணம்” என்ற தலைப்பில் 25 அரிய தகவல்கள் அடங்கிய கண்காட்சியும் இடம்பெற்றது. இதை ஆயிரக்கணக்கான மாணவர்கள் பார்த்து வியந்தனர். மேலும் சென்னை வானிலை மையம் பிரத்யேகமாக கொண்டு வந்திருந்த “வெதர் ஸ்டேஷன்” என்ற கண்காட்சியும், வானிலையைக் கண்டறியும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன..
நவ் காஸ்ட் ,ஷார்ட் காஸ்ட், மிட்காஸ்ட் போன்ற பல்வேறு முறைகளில் வானிலை முன்னறிவிப்புகள் வழங்கப்படுவதால் புயல் மழை வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலத்தில் மேலாண்மைக்கு தகுந்த வகையில் பயனளிககிறது.இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பில விவசாயம் மற்றும் நீர் ஆதரம் போக்குவரத்து துறைகளில் மிகுந்த பயனாளிக்கிறது..அந்த வகையில் 150 ஆண்டுகள் இந்த துறை படிப்படியாக தரம் உயர்ந்து இன்று இத்தகைய சேவைகளை மக்களுக்கு செய்து கொண்டு வருவதை எடுத்து உணர்த்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது..
வானிலை ஆய்வு மையம் கடந்து வந்த பாதைகள் படிப்படியாக எப்படி வளர்ந்தது மழை காற்று ஈரப்பதம் வெப்ப நிலைகள் உள்ளிட்டவற்றின் அளவீடுகளின் வளர்ச்சி மற்றும் கடந்த காலம் மற்றும் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகள் உபகரணங்கள் மாணவர்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டதோடு செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது
வரும் 14,15 தேதிகளில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் இதே போல் கண்காட்சி நடத்தப்படும் மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் அதில் 1875ல் பயன்படுத்தப்பட்ட தற்போது தொல்லியல் துறை வசத்தில் இருக்கும் உபகரணங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது ..
சமீபத்தில் பருவ மழை வழக்கத்தை விட 27% அதிக மழைப்பொழிவு காரணத்தால் ஈரபதம் அதிகமாக இருப்பதால் பகலில் இயல்பான வெப்பம் இருக்கும் அதேபோல் இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது இதனால் தான் ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதில் உறைபனி நிலவுகிறது..
வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவடைய வில்லை வரும் 11, 12 தேதிகளில் மழை எதிர்பார்க்கலாம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் அது குறித்த அறிவிப்புகளும் தெரிவிக்கப்படும். நூறாண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு ஜனவரி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: யாராக இருந்தாலும் நடவடிக்கை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!