Homeசெய்திகள்தமிழ்நாடுபழனிசாமியின் இடைக்கால மனு மீது பதில் அளிக்க ஓபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதில் அளிக்க ஓபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த சூழலில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதிலளிக்க எதிர்தரப்பான பன்னீர்செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

eps ops

we-r-hiring

வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் போட்டிபோட்டு அறிவித்துள்ளன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்கள் தரப்பிற்கு ஒதுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் ஈ.பி.எஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி முறையிட்டார்.

அந்த மனுவில், ஜூலை 11 ந் தேதி அன்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் திருத்தப்பட்ட கட்சி விதிமுறைகளை தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும், ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் வேட்பாளரை அங்கீகரித்து போடும் கையொப்பத்தை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வழங்கிய கடிதத்தை ஏற்க உத்தரவு வழங்க வேண்டும். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை ஒரு எதிர் மனுதாரராக சேர்க்க மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

eps

மனு தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள் மனு மீது பிப்ரவரி 3ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் பழனிசாமியின் இடையீட்டு மனு மீது தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், இடையீட்டு மனு தொடர்பாக ஓ.பி்எஸ் தரப்பு 3 நாட்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த வழக்கு இடைக்கால உத்தரவுக்காக மட்டுமே விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இடைக்கால தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால உத்தரவுக்காக மட்டுமே இந்த மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினார்.

MUST READ