Homeசெய்திகள்தமிழ்நாடுஉச்சநீதிமன்றம் தீர்ப்பு - அருந்ததிய மக்கள் கொண்டாட்டம்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு – அருந்ததிய மக்கள் கொண்டாட்டம்

-

- Advertisement -

அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து சேலத்தில் அருந்ததிய மக்கள்  கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கொண்டாடினர்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு - அருந்ததிய மக்கள் கொண்டாட்டம்விளிம்பு நிலையில் உள்ள மக்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வழி வகை செய்த முத்தமிழ் அறிஞருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்

பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை உச்சநீதி மன்றம் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்தது.

இதனை வரவேற்கும் விதத்திலும் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் முன்னேற்றம் காண வழி வகை செய்த முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலம் மாநகரில் அருந்ததிய மக்கள் அதிகம் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்

குறிப்பாக சேலம் மாநகராட்சி ஆறாவது கோட்டத்திற்குட்பட்ட காந்திநகர் பகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் படத்திற்கு மலர் தூவியதோடு அருந்ததியர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோன்று சின்ன திருப்பதி சேலம் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அருந்ததியர் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று அந்த மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முத்தமிழ் அறிஞர் கொண்டு வந்த அருந்துவதற்கான இட ஒதுக்கீடு மூலம் கல்வி பயின்ற மாணவர்களும் அவர்களது பெற்றோரும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கும் இந்த சட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய தற்போதைய முதலமைச்சர் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

விளிம்பு நிலையில் உள்ள மக்களை முன்னேற்றம் அடைய வழிவகை செய்த கலைஞருக்கும் முதலமைச்சருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

MUST READ