கரூர் உயிரிழப்பு குறித்து உண்மை கண்டறியும் குழு இன்று செய்தியாளர்களை சந்தித்தது. அப்பொழுது தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாக செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அலுவலகத்தில், கரூர் உயிரிழப்பு குறித்து அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது வழக்கறிஞர் மு.நிர்மலா பேசியதாவது, ”கரூர் சம்பவம் மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகிறது. அந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். வழக்கு வேறு விஷயம் என்றாலும், ஒரு கட்சியின் தலைவராக நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயரத்திற்கு விஜய் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தனர்.
கரூர் சம்பவத்தில் பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் விஜயை பார்க்க தான் வந்ததாகவும், அவரின் பேச்சை கேட்க வரவில்லை என குறிப்பிட்டுள்ளனர். விஜய் வாகனம் வந்த பின் தான் கூட்டத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் எந்த அளவுக்கு கட்டுப்பாடின்றி நடைபெற்றது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
இளைய தலைமுறையினர், விஜய் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கண்மூடித்தனமாக ஒரு நடிகரை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். ஒரு கட்சியில் ஒரு தலைவர் மட்டுமே இருக்கிறார். அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் அவருடைய அரசின் அமைச்சர்கள் எப்படி இருப்பார்கள்?
தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாக செயல்படவில்லை. அதனால் அந்த கட்சிக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரிக்கப்பட வேண்டும். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மிக முக்கியமானவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் “என்று வழக்கறிஞர் மு. நிர்மலா வலியுறுத்தியுள்ளாா்.
அன்புமணிக்கு ராமதாஸ் ஆப்பு! ஹெச்.ராஜாவுக்கு கவர்னர் பதவி! அண்ணாமலை உள்குத்துகள்!


