spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

-

- Advertisement -

 

"தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
File Photo

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வபிரபு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring

“ராமேஸ்வரம், மன்னார்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விரைவு ரயில்களில் வரும் மாற்றங்கள்”- தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மதுரை மாவட்டம், கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திருமாறனின் மகன் செல்வபிரபு, கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில், ஆடவர் பிரிவில் 16.78 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்று சாதனைப் படைத்தார்.

16 ஆண்டுகளுக்கு பின்னர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பீந்தர் சிங் என்ற தடகள வீரர், மும்முறை நீளம் தாண்டுதலில் 16.63 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. செல்வபிரபு அந்த முறியடித்து தங்கப் பதக்கம் வென்றதையடுத்து, தாய்லாந்தில் ஜூலை 12- ஆம் தேதி நடைபெறவுள்ள Asian Athletics Championship- 2023 போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளார்.

இதையடுத்து, செல்வபிரபுவுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்துத் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறன் அவர்களுக்குப் பாராட்டுகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்

“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அதேபோல், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஆசியாவின் சிறந்த ஜுனியர் (U20) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் Triple Jump வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். Asian Athletics Association- ன் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்குக் கழக அரசு என்றும் துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ