Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பு சோ்க்கை விரைவில் முடிகிறது

தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பு சோ்க்கை விரைவில் முடிகிறது

-

- Advertisement -
kadalkanni

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஜூன்- 27ஆம் கடைசி நாள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பு சோ்க்கை விரைவில் முடிகிறதுதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை பட்டப்படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியினம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்துகிறது. அந்த வகையில் 2024-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மூலம் ஜூன் 3ஆம் தேதி முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பு சோ்க்கை விரைவில் முடிகிறதுதற்போது வரை கால்நடை மருத்துவ படிப்பிற்கு மொத்தம் 12,643 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 5 மணிவரை விருப்பம் உள்ள மாணவர்கள் https://adm.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர்கள், அயல்நாட்டினர் ஆகியோர் தங்களுக்கான இட ஒதுக்கீடு, விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் கூடுதல் விவரங்களை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

MUST READ