கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட்(ஆர்சிசி) கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.இந்த அறிவிப்பை தொடர்ந்து, இதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சி துறை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பயனாளிகளின் பட்டியலை 30ஆம் தேதி நடக்கும் கிராம சபையில் வைத்து ஒப்புதல் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.apcnewstamil.com/news/toor-dal-palmolein-oil-are-freely-available-in-ration-shops/93576
அதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 5ஆம் தேதிக்குள் பணியாணை வழங்க வேண்டும் என்றும், ஜூலை 10ஆம் தேதிக்குள் வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சித் துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
இந்த 2024-25நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஊரகப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு குறைவாக குடிசைகள் உள்ள 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பகுதிகளில் அனைத்து வீடுகளும் கட்டப்பட்ட பிறகு இந்த 15 மாவட்டங்களும் ஊரக பகுதிகளில் குடிசை இல்லாத மாவட்டங்களாக மாறிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.