Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் புத்தாண்டையொட்டி எகிறிய பூக்களின் விலை!

தமிழ் புத்தாண்டையொட்டி எகிறிய பூக்களின் விலை!

-

 

தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – செல்வப்பெருந்தகை

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் மல்லிகை, முல்லை, ரோஜா உள்ளிட்ட ஏராளமான பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் பூக்கள், தெப்பம்பட்டி சாலையில் உள்ள மலர்ச்சந்தையில் ஏலம் விடப்படுகின்றன.

நாளை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 13) மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கனகாம்பரம், முல்லை பூ ஒரு கிலோ ரூபாய் 700- க்கும், மல்லிகை பூ ரூபாய் 600- க்கும், செவ்வந்தி பூ ரூபாய் 450- க்கும், சம்பங்கி, அரளி பூ ஒரு கிலோ ரூபாய் 350- க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பெரம்பலூரில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

பூக்களின் வரத்து அதிகமாக உள்ள போதிலும், விலை உயர்ந்து பூக்கள் ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

MUST READ