spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழில் பேசிய மாணவன்....கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை!

தமிழில் பேசிய மாணவன்….கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை!

-

- Advertisement -

 

தமிழில் பேசிய மாணவன்....கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை!

we-r-hiring

தமிழில் பேசிய மாணவனை கொடூரமாகத் தாக்கிய ஆசிரியரால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!

சென்னை மாவட்டம், ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசிய 5- ஆம் வகுப்பு பயிலும் மாணவனை, அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை நாயகி, மாணவனின் காதைத் திருகியதால், காதின் சதைக் கிழிந்து அறுவைச் சிகிச்சை செய்யும் நிலைக்கு மாணவர் தள்ளப்பட்டிருக்கிறார்.

இது குறித்து தகவலறிந்து வந்த சம்மந்தப்பட்ட மாணவனின் பெற்றோர், மாணவனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து, பள்ளிக்கு சென்ற பெற்றோர், சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியை நாயகியை சரமாரியாகத் தாக்கினர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ராயபுரம் காவல்துறையினர் விசாரித்தனர். பின்னர், மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், ஆசிரியை நாயகியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!

இந்த சம்பவம் ராயபுரம் பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளைத் தவறுகள் செய்தால், அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கூறுவது ஆசிரியர்களின் கடமை. மாணவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ