Homeசெய்திகள்தமிழ்நாடு"அதிகமாக நகர மயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“அதிகமாக நகர மயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"அதிகமாக நகர மயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அதிகப்படியான நகர மயமாக்கல் வசதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இன்று (பிப்.24) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூபாய் 2,465 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் தொடக்க விழா 95 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் ரூபாய் 1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடுமையான நிதி நெருக்கடியிலும் ரூபாய் 100 கோடியில் குடிநீர் திட்டங்களை வழங்கி வருகிறோம். சுத்திகரிப்பு நிலையம் மூலம் தென்சென்னை பகுதிகளுக்கு குடிநீர் தேவைப் பூர்த்திச் செய்யப்படும். அதிகப்படியான நகர மயமாக்கல் வசதிகள் கொண்ட மாநிலம் தமிழகம். நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவர்.

“46 மருந்துகள் தரமற்றவை”- மத்திய அரசின் பகீர் தகவல்!

மடிப்பாக்கம், வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். இந்தியாவிலேயே கடல்நீரை குடிநீராக்கும் பெரிய நிலையம் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ரூபாய் 70 கோடி மதிப்புள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன. அடிக்கல் நாட்டிய புதிய திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ