spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'உலக முதலீட்டாளர்கள் மாநாடு'- இன்று நடப்பது என்ன?

‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’- இன்று நடப்பது என்ன?

-

- Advertisement -

 

'உலக முதலீட்டாளர்கள் மாநாடு'- இன்று நடப்பது என்ன?

we-r-hiring

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் ‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று (ஜன.08) காலை 10.00 மணிக்கு தொடங்கியுள்ளது. மின்சார வாகனம், விவசாயம், உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடக்கவுள்ளன.

கனமழை: சென்னை புத்தகக்காட்சி இன்று ரத்து…. பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து!

மாநாட்டில் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பு பிற்பகல் 01.00 மணிக்கு நடைபெறவுள்ளது. மாநாட்டில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின்றன. முதலீட்டாளர்கள் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் உள்ள அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்வையிட மாணவர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரங்குகளைப் பார்வையிட 45 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தியை தமிழக அரசு அனுப்பி உள்ளது.

பிரான்ஸ், ஜப்பான் நாட்டின் அமர்வுகள் இன்றைய மாநாட்டில் தனித்தனியாக நடைபெறவுள்ளது. சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பு பகல் 01.00 மணிக்கு நடைபெறவுள்ளது. மாநாட்டின் முதல் நாளில் ரூபாய் 5.5 லட்சம் கோடியில் சுமார் 100 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது.

கோரமண்டல் தொழிற்சாலை விவகாரம்… திமுக அரசு இரட்டை வேடம்- நாராயணன் திருப்பதி கண்டனம்

டாடா குழுமம், ரிலையன்ஸ் ஜியோ, டிவிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை செய்துள்ளனர்.

MUST READ