Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெயில்....தவிக்கும் மக்கள்!

தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெயில்….தவிக்கும் மக்கள்!

-

 

"தமிழகத்தில் வெப்ப அலை வீசும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
File Photo

தமிழ்நாட்டின் கரூர், பரமத்திவேலூர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலையால் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியம் அடைந்து வருகின்றனர். இதனிடையே, தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர், பரமத்திவேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தருமபுரி, ஈரோட்டில் தலா 106 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சி 105, மதுரையில் 104, டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், தற்போது சற்று தணிந்து 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்து 2 நாட்களான மாடுகள் இறைச்சிக்காக விற்பனை!

இதேபோல் நாட்டின் பிற பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. ஆந்திரா மாநிலம், நந்தியால், கர்னூல், அனந்தப்பூர் மற்றும் கர்நாடகா மாநிலம் குல்பர்க், ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் தலா 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

MUST READ