Homeசெய்திகள்தமிழ்நாடுஉயிரிழந்து 2 நாட்களான மாடுகள் இறைச்சிக்காக விற்பனை!

உயிரிழந்து 2 நாட்களான மாடுகள் இறைச்சிக்காக விற்பனை!

-

 

உயிரிழந்து 2 நாட்களான மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்ய முயன்றது கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாச்சியார்கோவில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த மினி லாரியை சோதனையிட்ட போது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மினி லாரியில் உயிரிழந்த நிலையில் இருந்த மாட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மினி லாரி ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாடுகள் உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆனதும், மாட்டை இறைச்சியைப் பிரித்து கும்பகோணத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வந்ததை ஒப்புக் கொண்டனர்.

ஓடும் பேருந்தில் 6 சவரன் நகை திருடிய இரு பெண்கள்!

இதையடுத்து மாட்டிறைச்சி எந்தெந்த உணவகங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உணவுப் பாதுகாப்புத்துறை விசாரணைக்கு பின் உயிரிழந்த மாடு புதைக்கப்படும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது;

MUST READ