Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி

தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் – அரசு அதிரடி

-

- Advertisement -

tamilnadu assembly

தமிழகத்தில் முக்கிய உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக அவ்வபோது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். இந்த நிலையில், தமிழகத்தின் முக்கைய உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, மருத்துவத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமாரை வனத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

MUST READ