Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்: ஊழலை சட்டப்பூர்வமாக மாற்ற அரசு முயற்சி!

டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்: ஊழலை சட்டப்பூர்வமாக மாற்ற அரசு முயற்சி!

-

- Advertisement -

"டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்: ஊழலை சட்டப்பூர்வமாக மாற்ற அரசு முயற்சி!"
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் ஊழல் நடவடிக்கையை சட்டப்பூர்வமாக மாற்றி அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

​டாஸ்மாக் பாட்டில்களும் ரூ.10 கூடுதல் வசூலும்!

we-r-hiring

​முந்தைய காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் பெரிய அளவில் எழுந்துவந்த நிலையில், தற்போது இதனைச் சட்டப்பூர்வமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

​சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முறைகேடு தடுப்பு: மலைப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் மதுபாட்டில்கள் வீசப்படுவதைத் தவிர்க்கவும், காலி பாட்டில்களை மீண்டும் பெறும் முறையை தமிழ்நாடு  அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) மதுபாட்டில்களின் MRP விலையுடன் கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்பட்டு வந்தது. அத்துடன் காலி மதுபாட்டில்களை திருப்பிக்கொடுக்கும் நுகர்வோருக்கு அந்த 10 ரூபாய் திரும்ப வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்  தற்போது காலி பாட்டில் திரும்பப் பெறுதல் முறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது:
  • MRP விலை உயர்வு : நவம்பர் 1, 2026 முதல் டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலையுடன் ரூ. 10 ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலச் Cess’ என்ற பெயரில் நேரடியாக MRP விலையிலேயே சேர்த்து விற்கப்படும் எனவும், இதற்கு மேல் விற்பனை கவுண்டர்களில் பாட்டிலுக்கு ரூ. 10 என்று தனித்தனியாக கூடுதல் பணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்: ஊழலை சட்டப்பூர்வமாக மாற்ற அரசு முயற்சி!"

  • காலி பாட்டில் திருப்பிக் கொடுத்தால் பணம்: பயன்படுத்திய காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்பக் கொடுக்கும் நுகர்வோருக்கு எப்போதும் போல் ரூ. 10 திரும்ப வழங்கப்படும். எந்தக் கடையில் வாங்கினோம் என்பதைப் பொருட்படுத்தாமல் எந்த டாஸ்மாக் கடையிலும் காலி பாட்டிலைத் திருப்பிக் கொடுக்கலாம். 

  • டிஜிட்டல் கட்டணம்: நவம்பர் 1 முதல் ரூ. 1,000-க்கு மேற்பட்ட மது வாங்குவோருக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வேண்டும். இது 2027 ஜனவரி முதல் ரூ. 500-ஆகக் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

  • விதிமீறல் எச்சரிக்கை: MRP விலைக்கு மேல் கூடுதல் பணம் வசூலிக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    ஊழலை சட்டப்பூர்வமாக்க முயற்சி : டாஸ்மாக்கில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலித்து பெரும் ஊழல் செய்வதாக முந்தைய திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முதலமைச்சர் விஜய் முன்வைத்திருந்தார். அத்துடன் தவெக ஆட்சியில் அவ்வாறு மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் 3 மாதங்களிக்கு பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், 2வது முறையாக முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்திருந்தார். அதன்படி 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது அரசே டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலையை ரூ. 10 உயர்த்தியிருப்பது மதுப்பிரியர்களிடையே அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஊழலை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

​நடைமுறைச் சிக்கல்கள்: பாட்டில்களை மீண்டும் கொண்டு வந்து ஒப்படைக்கும் போது அதற்கான தொகையைத் திரும்பப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் மதுபானக் கடை ஊழியர்களின் பணிச்சுமை குறித்துப் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அமைச்சரின் அதிரடி உத்தரவுகள் எந்த அளவுக்குத் கீழ்மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ