Homeசெய்திகள்தமிழ்நாடுபெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு! தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் திமுக...

பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு! தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

திருவண்ணாமலை, விழுப்புரம், கோவையில் கண்டன முழக்கம் – காய்கறி மாலை அணிந்து, அரிசி மூட்டையை ஏந்தி நூதனப் போராட்டம்!பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு! தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நிலவுவதாகக் கூறப்படும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்புக் குறைபாடுகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு! தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

we-r-hiring

திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் மகளிரணி செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்ப உள்ளனர்.பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு! தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

விழுப்புரத்தில் காய்கறி மாலை அணிந்து நூதனப் போராட்டம்!

விழுப்புரம் ஒருங்கிணைந்த திமுக மாவட்ட மகளிரணி சார்பில், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை மற்றும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நிலவுவதாகக் கூறப்படும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து விழுப்புரம் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

விலைவாசி உயர்வைச் சுட்டிக்காட்டும் வகையில் பெண்கள் காய்கறிகளால் ஆன மாலைகளை அணிந்தும், கைகளில் அரிசி மூட்டைகளை ஏந்தியும் நூதன முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், ‘விஜய் மாமா எங்கே?’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தி திமுக மகளிரணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

கோவையில் திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை மாநகர் மாவட்ட திமுக மகளிரணி சார்பில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மாநில மாணவரணி செயலாளர் வீரமணி தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடர் குரல்!

சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை முன்வைத்து திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை! கனிமொழி தலைமையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து திமுகவினர் கண்டன முழக்கம்!

MUST READ